தைத்திருநாளை முன்னிட்டு வேட்டாங் குளம் கிராம மகளிர்க்கு தேநீர் விருந்து மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள் பெருமாள் வழங்கல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜனவரி, 2025

தைத்திருநாளை முன்னிட்டு வேட்டாங் குளம் கிராம மகளிர்க்கு தேநீர் விருந்து மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள் பெருமாள் வழங்கல் !

நெமிலி யில் தைத்திருநாளை முன்னிட்டு வேட்டாங்குளம் கிராம மகளிர்க்கு தேநீர் விருந்து கொடுத்த மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள் பெருமாள்!

ராணிப்பேட்டை, ஜன 15 -

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த  சயனாபுரம் கிராமத்தில் உள்ள மாவட்ட மகளிர் அணி துணை அமைப் பாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினருமான சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் இல்லத்தில்தமிழர் திருநாளாம்
தைத்திருநாளை முன்னிட்டு வேட்டாங் குளம் ஊராட்சிசார்ந்த மகளிர்அணியினர்
சுந்தரம்மாள் பெருமாள் அவர்களைச் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன் பிறகு சுந்தராம்பாள் பெருமாள் வேட்டாங்குளம் மகளிர் அணியினருக்கு தேநீர் விருந்து டன் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் வேட்டாங்குளம் மகளிர் அணியினர். நாங்கள் நான்கு தலைமுறைகளாக இந்த ஒரே இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு பட்டா, மின் வசதி இல்லை என கோரிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து நம்ம தமிழக முதல்வரின் நல்லாட்சியில் எல்லாம் நல்லபடியாக முடியும் நம்ம ஒன்றிய செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் அவர்களின் மூலம் அமைச்சர். ஆர். காந்தி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கிறேன் என சுந்தரம்மாள் பெருமாள் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad