மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் சமத்துவப் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில் பாரம்பரியமான உடைகளில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம்,கோலாட்டம்,நாட்டுப்புற பாடல்,கும்மியாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ச்சியாக உழவர் தினத்தின் சிறப்புகளைப் பற்றி உழவர் வேடமணிந்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்கள் எடுத்துரைத்தனர். திருவள்ளுவர் தினத்தை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்கள் திருவள்ளுவர் வேடமணிந்து திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் மாணவர்கள் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இவ்விழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் திருமதி பி. ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார். இவ்விழா பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் தலைமையிலும் பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா அவர்கள் மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக