கோத்தகிரி NPA கல்லூரியில் தெசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜனவரி, 2025

கோத்தகிரி NPA கல்லூரியில் தெசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

 


கோத்தகிரி NPA கல்லூரியில் தெசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்  28.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று கோத்தகிரி NPA கல்லூரியில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான கவிதை போட்டி மற்றும் கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது இதில் NPA கல்லூரி கட்டபெட்டு அரசு உயர்நிலைப் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அரவேணு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி சோலூர் மட்டம் கேர் கம்பை பள்ளி கோத்தகிரி சென்மேரிஸ் மகளிர் பள்ளி ஆகியவை கலந்து கொண்டது. ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் கோவை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு. பிரதீப் குமார் அவர்களும் கோத்தகிரி என்பிஏ பாலிடெக்னிக் கல்லூரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.  இதில் பள்ளி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad