திருக்கோவிலூர் நகராட்சியை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க முதலமைச்சரை சந்தித்து மனு
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக பிரித்ததில் இருந்து திருக்கோவிலூர் பகுதி மக்களுக்கு எண்ணற்ற நிர்வாக சிக்கல்களும் திருக்கோவிலூர் பகுதியின் வளர்ச்சி நிலையும் கேள்விக்குறியாக இருந்து கொண்டு வருகிறது.
இதனால் திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.
அதற்கான நடவடிக்கையாக ஹாஸ்பிடல் ரோட்டில் உள்ள காரி பாரி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு இதற்கான தீர்மானமும் போடப்பட்டு அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் விழுப்புரத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதல்வர்
மு.க. ஸ்டாலினிடம் திருக்கோவிலூர் தொகுதியில் அடங்கும் திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்ட இணைப்பது குறித்து ஒருங்கிணைப்பு குழுவினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அருகில் அமைச்சர் பொன்முடி உட்பட பலர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக