சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில் Rock 2025 என்ற தலைப்பில் புவி அமைப்பியல் துறையில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் புவியமைப்பியல் அமைப்பியல் துறையின் சார்பாக "Rock 2025" என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாணவர் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அழகப்பா அரசு கலைக்கல்லூரி புவி அமைப்பியல் துறை அணி அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த வெற்றியாளருக்கான பரிசு கோப்பையை பெற்றது. இதில் போஸ்டர் தயாரித்தல்,வினாடி வினா,மிஸ்டர் மற்றும் மிஸ் ராக் என்று நடைபெற்ற பல்வேறு வகையான போட்டிகளில் ஒன்பது கல்லூரிகளில் இருந்து 78 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் புவி அமைப்பியல் துறை மாணவர்கள் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்றதோடு ஒட்டுமொத்த வெற்றியாளருக்கான பரிசு கோப்பையும் வென்றனர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளான அடினா எலிசபெத் சமந்தா, கோவர்த்தனம், லட்சுமி, அப்துல்லாஹ் இப்ன் முபாரக், ஸ்ரீ தரணி, விஸ்வா, தேவேந்திர ராஜ்குமார், குகன்புகழேந்தி, தியா தர்ஷினி, நஸ்ரூதீன், சரவணன், வாசுகி, கீர்த்தனா, அவந்திகா ஆகியோரை கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி மற்றும் புவியமைப்பியல் துறை தலைவர் முனைவர் உதய கணேசன் மற்றும் பேராசிரியர்களும் ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் பாராட்டி வாழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக