குடியாத்தம் , பிப் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 12 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடை
திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு 36 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மனோஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு நியாய விலைக் கடையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன்
மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கல்லூர் கே. ரவி மாவட்ட கழக துணை செயலாளர் ஜி எஸ் அரசு நகர அவை தலைவர் கா.கோ நெடுஞ்செழியன்
வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம்
டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் த தரணி,
விற்பனையாளர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரன் மோகன், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக