குடியாத்தம் , பிப் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் கொரோனாவுக்கு முன் நின்ற சென்ற ரயில்களை மீண்டும் நிறுத்த வேண்டும் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் வேலூர் எம்பி டிஎம்.கதிர் ஆனந்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் கொரோனா காலகட்டத்திற்க்கு முன் நின்று சென்ற ரயில்களும் கூடுதலாக ரயில்கள் குடியாத்தம் ரயில்
நிலையத்தில் நிறுத்தவேண்டும் இன்று குடியாத்தம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வேலூர் எம்பி. டிஎம்.கதிர் ஆனந்திடம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் மற்றும் ரயில்பயணிகள் சார்பில் லயன்ஸ்கிளப் தலைவர் ஜெ.பாபு கோரிக்கை மனு வழங்கினார் மேற்கண்ட மனுவில் குடியாத்தம் வழியாக செல்லும் சென்னை பெங்களூர் லால்பாக் பிருந்தவன் ரயில் கோவை சென்னை இன்டர்சிட்டி திருவனந்தபுரம் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் குடியாத்தம் ரயில்நிலையத்தில் நின்று சென்றால் குடியாத்தத்தில் உள்ள 200க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் மற்றும் நகர பகுதியில் உள்ள மக்கள் பெரும் பயனடையவர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குடியாத்தம் பகுதியில் தினசரி ரயில் மூலமாக வேலூர் காட்பாடி சென்னைஅரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் சேலம் ஈரோடு கோயம்புத்தூர் பெங்களூர் மைசூர் வரை செல்லும் பயணிகள் ரயிலை விரும்புகின்றனர் மேலும் கூடுதலாக ரயில்களை நிறுத்தம் செய்து வியாபாரிகள் அரசு பணி மற்றும் பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது உடன் குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன் நகராட்சிதலைவர் எஸ். சவுந்தர்ராஜன் நெல்லூர்பேட்டை அரசுமேநிலைப்பள்ளி பிடிஏ தலைவர் ஜிஎஸ். அரசு நகரமண்ற உறுப்பினர் ம. மனோஜ் லயன்ஸ்கிளப் மாவட்டத்தலைவர் ஏ. சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக