குடியாத்தம் ,பிப் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடி குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர் கொல்லப்பல்லி கிராமத்தில் பொயிட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் தீயணைப்பு துறையும் இணைந்து தீ தடுப்பு விழிப்புணர்வு கல்வியை மகளிர்களுக்கு அளித்து வள்ளிமலை ஆதீனம் குரு மகராஜ் ஸ்ரீ சிவானந்த வாரியார் அவர்கள் இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆதீனம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் பொயட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் திரிவேணி சாமிநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் சமையல் எரிவாயு நீர் நிலைகள் எதிர்பாராமல் ஏற்படும் தீ விபத்து அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் காப்பது போன்ற குறித்து தீயணைப்புத் துறை நிலை அலுவலர் சா சரவணன் அவர்களால் விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது உடன் தீயணைப்பு துறை சார்ந்த செந்தில் குமார் அவர்கள் உடன் இருந்தனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை.பொயிட்ஸ் நிறுவன பணியாளர்கள் உஷா சாந்தலட்சுமி தன்னார்வலர் மலர் கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக