உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாஜக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி மீது உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் கிராம மக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நாச்சியார்பேட்டை கிராமம் மற்றும் நாச்சியார் பேட்டை மேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் ஏரி வேலை செய்யும் பெண்களின் ஆதார் அட்டை நகல்களில் போலியான புகை படங்களை பதிவு செய்து தனியார் நிதி நிறுவனங்களில் ரூபாய் 20 லட்சம் வரையில் இதே கிராமத்தை சேர்ந்த பாஜக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சிவசக்தி என்பவர் பணத்தை பெற்றுக் கொண்டு அதனை கட்டாமல் ஏமாற்றியதால் தற்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் மூலம் நாச்சியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வாங்கிய கடனை செலுத்துமாறு நோட்டீஸ் வழங்கியதால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிவசக்தியிடம் பலமுறை கேட்டும் உரிய பதில் அளிக்காததால் அந்த கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப்பிடம் தங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் மனு அளித்துள்ளனர் புகாரை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகவும் சிவசக்தி கடன்களைப் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருவது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் ஆதார் அட்டையின் நகலில் புகைப்படங்களை ஒட்டி அதன் மூலம் தனியார் நிதி நிறுவனங்களில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக