கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே அதிக பாரம் ஏற்றி சாலை நடுவே பழுதாகி நின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்திய கனரக வாகனத்திற்கு ₹38,000 அபராதம் விதிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே அதிக பாரம் ஏற்றி சாலை நடுவே பழுதாகி நின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்திய கனரக வாகனத்திற்கு ₹38,000 அபராதம் விதிப்பு


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே  அதிக பாரம் ஏற்றி சாலை நடுவே பழுதாகி நின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்திய கனரக வாகனத்திற்கு ₹38,000 அபராதம் விதிப்பு


வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சுங்கான் கடை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று மதியம் ஒரு மணி அளவில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனம் சாலையின் நடுவே பழுதாகி நின்றது. இதனால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது இதை தொடர்ந்து குளச்சல் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். மாற்று வாகனம் வர வைக்கப்பட்டு பொருட்களை மாற்றிய பின் மாலை 7 மணி அளவில் போக்குவரத்து முழு அளவில் சீரானது. அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிக அளவு பாரத்தை ஏற்றுதல், பொது போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ₹38,000 அபராதம் விதிக்கப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad