திருப்பூர் மாநகரில் 15-வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்த கடைகளுக்கு சீல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

திருப்பூர் மாநகரில் 15-வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்த கடைகளுக்கு சீல்



திருப்பூர் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை & குட்கா பொருட்கள் விற்கப்படுவதை தடுக்கும் பொருட்டு காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து கூட்டு நடவடிக்கையாக கடைகளில் சோதனை செய்தனர். இதில் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள வேந்தன் என்பவரின் பெட்டி கடை இரண்டும் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள தனபால் என்பவரின் பெட்டி கடை  ஆகிய மூன்று  கடைகளில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது எனவே காவல்துறை பாதுகாப்பு வழங்க,உணவு பாதுகாப்பு துறை ஆதிகாரிகளால் மூன்று கடைகளுக்கு  பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் அவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad