ஆதரவின்றி பல வருடங்களாக சுற்றி திரிந்த மனநோயாளிகளுக்கு மொட்டையடித்து புத்தாடை அணிவித்த நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளையினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

ஆதரவின்றி பல வருடங்களாக சுற்றி திரிந்த மனநோயாளிகளுக்கு மொட்டையடித்து புத்தாடை அணிவித்த நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளையினர்


திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா போத்தம்பாளையத்தில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பானது  திருப்பூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஆதரவின்றி சுற்றி திரியும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்கள், வயது முதிர்ந்த நபர்கள், மாற்றுத் திறனாளிகள் என பலாயிரம் பேருக்கும் தூய்மைப்படுத்தி குளிக்க வைத்தும் புத்தாடை அணிய வைத்து ஒரு வேளை உணவும் குடிநீரும் தொடர்ந்து வழங்கி வருகின்றது

இதில் ஐந்தாயிரத்திற்க்கு  மேற்பட்ட ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த நபர்களை ஆங்காங்கே மீட்டெடுத்து அந்தந்த காப்பகத்தில் முறையான அனுமதி பெற்று பாதுகாப்புடன் ஒப்படைத்து வந்திருக்கின்றனர்

இந்த நிலையில் தற்போது நம்பியூரில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஆண் நபர் கோவை மெயின் ரோடு அவிநாசி சாலை வழியாக சுற்றி வருவது பற்றியும் இவர் பல வருடங்களாக குளிக்காமல் சாலைகளில் ஆதரவின்றி சுற்றி திரிகிறார் என்று 

 நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளைக்கு பொதுமக்கள் தொடர்ந்து தகவல் அளித்திருந்தார்கள் இதனடிப்படையில்  16/02/2025 ஞாயிறு அன்று   அறக்கட்டளை நிர்வாகிகள்  நேரில் வந்து விசாரித்தனர் இதில் மனநிலை பாதிக்கப்பட்ட நபரின் சொந்த ஊர் நம்பியூர் பக்கம் மொட்டணம் இவர் பெயர் பெருமாள் வயது 55 இவருக்கு திருமணம் ஆகி சில தினங்களிலேயே மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்றாராம் இவருடன் கூடப் பிறந்த அண்ணன்  ஒருவர் பழனிச்சாமி என்பவர் அவருக்கும் திருமணம் ஆகி மனைவி இல்லை என்பதால் அவரும் தனியாக வாழ்ந்து வருவதாக பொது மக்கள் கூறினார்கள்

 அறக்கட்டளை நிறுவனர் மற்றும் உறுப்பினர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை நம்பியூர் பேருந்து நிலைய வளாகத்தில் அமர வைத்து அவருக்கும்  பின்னர் இன்னொரு நபருக்கும்

என இருவருக்கும் மொட்டையடித்து குளிக்க வைத்து புத்தாடை அணிய வைத்து ஒரு வேளை உணவும் குடிநீரும் வழங்கினர்.

 இந்த அளப்பரிய செயலை பலரும் வெகுவாக பாராட்டிச் சென்றனர்.. இந்த சேவைப் பணியில் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ந. தெய்வராஜ்,  உறுப்பினர்கள் சிவகாமி, சந்தோஷ், ஹரிபிரசாத், லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad