திமுக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது அந்த வகையில் திமுக தலைவரும், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் வடக்கு அவிநாசி மாவட்டத்திற்கு திருப்பூர் மாநகர மரியாதைக்குரிய மேயர் ந. தினேஷ்குமார் அவர்களை அறிவித்துள்ளார்.
அவருக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர் அந்த வகையில் திமுக நிர்வாகி முன்னாள் மாமன்ற உறுப்பினரும் ஆகிய சிவபாலன் அவர்கள் வடக்கு அவிநாசி மாவட்ட செயலாளரும், மேயருமான ந. தினேஷ் குமார் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கொ. ராமதாஸ் அவர்களும், 14 வது வட்ட கழக செயலாளர், வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும், கிணத்துக்கடவு தேர்தல் பொறுப்பாளருமாகிய மு.ரத்தினசாமி அவர்களும் மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் அவர்களும் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக