ஈரோடு கிழக்கு: 1.76 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

ஈரோடு கிழக்கு: 1.76 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் :


 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


ஈரோட கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த 26-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 26 ஆம் தேதி அன்று 40

ஆயிரத்து 429 வாக்காளர்களுக்கும்,

27-ம் தேதி அன்று 34 ஆயிரத்து 859

வாக்காளர்களுக்கும், 28 ஆம் தேதி

32 ஆயிரத்து 79 வாக்காளர்களுக்கும்,

29-ந் தேதி 37 ஆயிரத்து 146

வாக்காளர்களுக்கும், நேற்று 31

ஆயிரத்து 539 வாக்காளர்களுக்கும் பூத்

சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம்

இதுவரை 1 லட்சத்து 76 ஆயிரத்து

052 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்

விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள வாக்காளர்களுக்கு

இன்று கொடுத்து முடிக்கப்படும் என

அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad