கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது...1.200 கிலோ கஞ்சா பறிமுதல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 பிப்ரவரி, 2025

கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது...1.200 கிலோ கஞ்சா பறிமுதல்


கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது...1.200 கிலோ கஞ்சா பறிமுதல்


கன்னியாகுமரி  மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.


அதன் தொடர்ச்சியாக, களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் கஞ்சா விற்பனைக்காக  வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் மொபீ (37), களியக்காவிளை பகுதியை சேர்ந்த மாலிக் முகமது என்பவரின் மகன் மன்சூர் (27) மற்றும் சுந்தரம் என்பவரின் மகன் விஜயகுமார் (40), ஆகியோரிடமிருந்து 1.200 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்து மூன்று  பேரையும்  கைது  செய்தனர்.


மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக  கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது  செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad