ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் கிராமம், பச்சாம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழா நிகழ்ச்சிகள்...
21.01.2025 செவ்வாய் - அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் விழா துவக்கம்,
23.01.2025 வியாழன் - அம்மனுக்கு கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் பூவோடு வைக்கப்படும்
30.01.2025 வியாழன் - மதியம் அம்மனுக்கு காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்தம்,பால்குடம்,தேன் குடம், ஆறுமுகக் காவடி,வேல் மற்றும் அக்கினி கும்பம் எடுத்துவந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள்...
இரவு மாவிளக்கு பூஜை மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது...
31.01.2025 - வெள்ளி - காலை சிறுவர்,சிறுமியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது...
மதியம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பச்சாம்பாளையம் ஊர் முழுவதும் திரு வீதி உலா மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது...
ஆண்களும்,பெண்களும் மஞ்சள் பூசிக்கொண்டு மஞ்சள் நீராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
01.02.2025 சனி - இரவு மறு அபிஷேகம் எடுத்துக்காட்டு ஏலம் நடைபெற்று விழா நிறைவு பெறும்...
பக்தர்கள் கம்பத்திற்கு 7 நாட்களும் தீர்த்தம் ஊற்றினார்கள்...
விழா ஆரம்பித்த நாள் முதல் நிறைவு பெறும் நாள் வரை 12 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதமும், அன்னதானம் வழங்கப்பட்டது..
திருவிழா ஏற்பாட்டு குழுவினர்..
உதயம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் பச்சாம்பாளையம்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக