திரு ராமையா பாகவதர் நினைவு நிலை
செந்தில்முருகன் பள்ளி மாணவனுக்கு பாராட்டு
மாவட்ட வாசிப்பு இயக்கம், வஉசி நற்பணி மன்றத்தினர் பரிசு வழங்கி கவுரவிப்பு
திருச்செந்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள திரு ராமையா பாகவதர் நினைவு நிலை ஸ்ரீ செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவன் ச.ஜெய்ரோ, ஓவிய போட்டியில் மாநில அளவில் 3ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதையடுத்து மாணவன் ஜெய்ரோவிற்கு பள்ளி நிர்வாக சார்பில் பாராட்டி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் மற்றும் வஉசி நற்பணி மன்றம் சார்பில், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த கலைத் திருவிழாவில் ஓவிய போட்டியில் மாநில அளவில் 3வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்ற மாணவன் ஜெய்ரோவுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வாசிப்பு இயக்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வஉசி நற்பணி மன்ற நிறுவனர் இசக்கிமுத்து, வாசிப்பு இயக்க செயலாளரும், நல்நூலகருமான மாதவன், பொருளாளர் ஜெகநாத பெருமாள், ஆலோசகர் முத்துகிருஷ்ணன் ,முன்னாள் மாணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை சுபா வரவேற்று பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக