நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி காய்கறி சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் நவீன வசதிகளுடன் கூடிய காய்கறி சந்தை மற்றும் காய் கனி விற்பனை நிலையம் உள்ளிட்டவைகள் 40.46 கோடி மதிப்பில் கட்டி முடிக்க கடந்த ஆறாம் தேதி தமிழக முதலமைச்சரால் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திறக்கப்பட்டது.
சுமார் 413 கடைகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய காய்கறி சந்தையில் 800க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் 90-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் கடை நடத்தி வந்த நபர்களுக்கே மீண்டும் கடை வழங்க வியாபாரிகள் சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
இதனை பரிசீலிப்பதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியால் கட்டப்பட்டுள்ளது அதில் கடை நடத்தி வரும் பலர் மூன்றாம் நான்காம் நபராகவே இருந்து வருகிறார்கள்
புரோக்கர்கள் மூலம் கடைகளை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு இலட்சக்கணக்கில் வாடகை வசூல் செய்து வருகின்றனர் இதனால் வியாபாரிகள் பலர் பாதிக்கப்படுவதாக கூறி நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாஜக மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையில் ஆட்சியரை சந்திக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆட்சியரை சந்திக்க அலுவலகத்தில் நுழைந்த நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கினார்
தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆறு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.பாஜகவினர் அளித்த மனுவில் ஏழை எளிய மக்களுக்காக கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி இன்றைய திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகங்களில் ஒன்றான பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மார்க்கெட்டை புரோக்கர்கள் தனது பெயரிலும் தங்களது குடும்பத்தினர் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் கடைகளை வாடகை கொடுத்துவிட்டு கூடுதல் வாடகைக்கு கடைகளை விடுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளை போல் பொது ஏலம் நடத்திய கடைகளை வாடகைக்கு விட வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக