வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை!


குடியாத்தம், பிப் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட் சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை தாங்கினார்
வேளாண்மை துறை இணை இயக்குனர்  
உமா சங்கர் முன்னிலை வகித்தார்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் மண்டல துணை வட்டாட்சியர் குமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார் கார்த்திக் புகழரசன் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் உமா பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

01.100. நாள் வேலைகள் முறையாக வழங்கு வதில்லை.
கொடுக்கப்பட்ட வேலைக்கு ஐந்து மாத காலமாக சம்பளம் கொடுக்க வில்லை அதிகாரிகளை கேட்டால் அரசாங்கம் கொடுத்தால் கொடுக்கிறோம் என்கிறார்கள்.உரிய நடவடிக்கை எடுத்து பணம் கிடைக்க செய்ய வேண்டும்.

2.. பல்வேறு ஊர்களில் பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலை வழங்க வில்லை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

03.வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

04.முதியோருக்கு வழங்க படும் பென்ஷன் பாரத வங்கிகளின் மூலம் பணம் வழங்கும் அலுவலர்கள் முதல் நாள் கையெழுத்து வாங்கி கொண்டு மூன்று நாட்களுக்கு பிறகுதான் பணம் வழங்குகிறார்கள் 
இது முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் அதை முறைப்படுத்தி வழங்கவேண்டும் 

05. ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தினம் தினம் வழங்குகிறார்கள் பெருவாரியான கடைகள் பகுதிநேர கடைகள் என்பதால் கிராம் மக்கள் மிகவும் துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர்.
அதிகாரிகள் ஒரே நாளில் அனைத்து பொருட்களும்  தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

06. தொடர்ந்து வனவிலங்குகள் வருவது போவதும் சகஜ நிலைக்கு வந்து விட்டது.உடனே வனவிலங்குகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வனத்தை சுற்றி வாழ்ந்து வரும் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

7. விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. இதை வட்டாட்சியர் உறுதி படுத்தவேண்டும்.

8. விவசாயிகள் கொடுக்கின்ற மனுக்களுக்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் இருந்து உரிய பதிலும் எடுத்துத்துள்ள நடவடிக்கை குறித்தும் மனுதாரருக்கு வருவதில்லை. வட்டாட்சியர் அவர்கள் ஆய்வு செய்து உரிய பதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. விவசாய. பிரதிநிதிகள்.  துரை செல்வம்.   சம்பத் நாயுடு.    
எம் சேகர்.  பழனியப்பன்.  உள்ளிட்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி பேசினார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad