மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் 3ம் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் 3ம் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி


மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் 3ம் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.



தமிழக துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் சோழவந்தான் சட்டமன்ற  தொகுதியின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது


வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.


மதுரை சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் 1020 காளைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேந்த 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற்றுள்ளனர்.


களத்தில் நின்று விளையாடும்
காளையின் உரிமையாளருக்கும்,
காளைகளை தழுவும் வீரர்களுக்கும் தங்ககாசு, சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட  பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


விடுமுறை நாளான இன்று பொதுமக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad