500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி பாலகுருநாதன் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி பாலகுருநாதன் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம்


500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி பாலகுருநாதன் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


திருமங்கலம் அருகே கள்ளிக்குடி சிவரக்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் அதிகாலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து கலச பூஜை, விநாயகர் பூஜை செய்து புனித நீர் எடுத்து வந்து சிவாச்சாரியார்கள் கோபுரகலசத்திற்க்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது


இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்பாளை வணங்கி சென்றனர்.சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முடிவில் தீர்த்தம் தெளிக்கபட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலில் பாலகுருநாதன் அங்காளம்மன் சுவாமிகள் படிமனைத்து எடுத்து இருந்த நிலையில் இதற்கு முன்னதாக இரண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்று மீண்டும் இரண்டாவது முறையாக இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்று இதில் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad