வாகன தணிக்கையின் போது பேர்ணாம்பட்டு அடுத்த பந்தல் பள்ளி அருகே 520 மது பாக்கெட்டுகள் பறிமுதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 பிப்ரவரி, 2025

வாகன தணிக்கையின் போது பேர்ணாம்பட்டு அடுத்த பந்தல் பள்ளி அருகே 520 மது பாக்கெட்டுகள் பறிமுதல் !



பேர்ணாம்பட்டு , பிப் 13 -
பேர்ணாம்பட்டு அடுத்த பந்தல் பள்ளி அருகே 520 மது பாக்கெட்டுகள்
பறிமுதல் !
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பத்தலப்பள்ளி செக்போஸ்டில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னதுரை சப்-இன்ஸ்பெக்டர் ஏட்டு தமிழ் போலீஸ் ரேகா ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக  மூட்டைகளுடன் டூவீலரில் 2 பேர் பேரணாம்பட்டு நோக்கி வந்தவர் களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிப்பட்ட வரை போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததார். சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர் அதில் கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது விசாரணையில், கள்ளிச் சேரி பகுதியை சேர்ந்த ஸ்ரீராமுலு மகன் அப்புனு என்கிற அருண்குமார் (வயது 30) என்பதும் கர்நாடகா மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது.  அருண்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 520 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து  வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவரை குறித்து விசாரித்து வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad