இந்நிலையில் இன்று மாலை பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்பட்டது. பேருந்தை ஓட்டுனர் ஜாவித் என்பவர் ஒட்டிச்சென்றார். அப்போது பேருந்து செட்டியப்பனூர் பகுதி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனர் ஜாவித் என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து தறிகட்டு ஓடியது. அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக சுதாரித்த கொண்ட நடுத்துநர் சம்பத் சாதிரியமாக செயல்பட்டு பேருந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் பேருந்து சாலையில் இருந்து சென்ட்ரல் மீடியன் மீது மோதி நடுவே ஏறி நின்றது.
தகவல் அறிந்த பள்ளி நிர்வாகிகள் உடனடியாக மாற்றுப் பேருந்து மூலம் மாணவர்களை பத்திரமாக மீட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுத்துநர் சம்பத் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை கட்டுப்படுத்தி நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் R.மஞ்சுநாத்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக