குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 பிப்ரவரி, 2025

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு !


குடியாத்தம், பிப் 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அப்பகுதி மக்கள் அச்சம்
சிறுத்தையை நேரில் பார்த்த மூதாட்டி ஆதிர்ச்சி கிராம மக்கள் அச்சம் சிறுத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை
வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே வி குப்பம், உள்ளிட்ட   வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து காணப் படுகிறது குறிப்பாக கே.வி.குப்பம் அருகே துருவம் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிறுத்தை தாக்கி இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது
மேலும் குடியாத்தம் அடுத்த காந்தி கணவாய் பகுதியில் தொடர்ந்து ஆடு மாடு கோழி உள்ளிட்டவற்றை சிறுத்தை தாக்கி வரும் நிலையில் சிறுத்தையை பிடிக்கவும் சிறுத்தையை கண்காணிக் கவும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று குடியாத்தம் அருகே சாமியார்மலை பகுதியில் மலையை ஒட்டிய குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து குரங்கை தாக்கி இழுத்துக் கொண்டு ஓடி உள்ளதை கண்ட அப் பகுதியைச்  சேர்ந்த பெண் அச்சமடைந்து கூச்சலிடவே சிறுத்தை அருகே இருந்த வனப்பகுதிக்குள் ஓடி உள்ளது இது குறித்து குடியாத்தம் வனத் துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் வனத்துறையினர் மற்றும் குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யா னந்தம் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர் மேலும் குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad