நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் இருபுறமும் பாக்கிய விநாயகர் மற்றும் கல்யாண விநாயகர் திருக்கோவில்கள் அமைந்திருந்தது கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு ரூபாய் 79 கோடி மதிப்பில் புதியதாக அடுக்குமாடி வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த 2018 டிசம்பர் மாதம் பேருந்து நிலையம் மூடப்பட்டது
இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருபுறமும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விநாயகர் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு இடித்து அகற்றப்பட்டது இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சூழலில் விநாயகர் கோவிலை மீண்டும் அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்
இந்த சூழலில் பேருந்து நிலையத்தின் கீழ் பகுதியில் புதியதாக பிரசித்தி பெற்ற பாக்கிய விநாயகர் கோவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது தொடர்ந்து நேற்றைய தினம் காலை முதல் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு நேற்று மாலை முதல் கால யாக சாலை பூஜையும் அதனைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை சந்திப்பு பாக்கிய விநாயகர் பிரதஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது
அதனை தொடர்ந்து இன்றைய தினம் அதிகாலை முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட மகா கலசங்கள் கோவிலை ஊர்வலமாக சுற்றி எடுத்துவரப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது தொடர்ந்து பாக்கிய விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது
7 ஆண்டுகளாக பாலா ஆலயம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பாக்கிய விநாயகர் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிலையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக