ஜோலாா்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஊராட்சி உறுப்பினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

ஜோலாா்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஊராட்சி உறுப்பினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!.


திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த தில்லை நகரைச் சோ்ந்தவா் மகேந்திரன்(45). இவா் பாச்சல் ஊராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினராக பதவி வகித்து வருகிறாா். இவா் அரசுப் பள்ளியில் பயிலும் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு மீண்டும் அவா் அந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதில் மனவேதனை அடைந்த அந்த சிறுமி இதுகுறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளாா். 


இதனால் அதிா்ச்சியடைந்த அவரது தாயாா் இதுகுறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில்,போலீஸாா் மகேந்திரனை நேரில் அழைத்து விசாரித்தனா். அதில் அவா் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது. பின்னா் மகேந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் R.மஞ்சுநாத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad