சீத்தான்பேட்டை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் மற்றும் புதிய நியாய விலைக் கடையினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீத்தான்பேட்டை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, கிளைச் செயலாளர் சேது பாண்டி, சாலை ஆய்வாளர் கருப்பையா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸ், வட்டார கல்வி அலுவலர் அமிஷா பானு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா, பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் வனிதா, பெருமச்சேரி தலைமையாசிரியர் மனோகரன், கீதாம்பேட்டை தலைமையாசிரியர் எட்வர்ட் சவரிமுத்து, பிரதிநிதி ராஜா, ஆசிரிய பெருமக்கள், குழந்தைச் செல்வங்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக