இவர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார், இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல பணியை முடித்துவிட்டு நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வாணியம்பாடி புதூர் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள தடுப்பு வேலி மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலை மற்றும் முகம் தாடை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் R.மஞ்சுநாத்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக