உதகை கமர்சியல் சாலையில் மனிதக் கழிவுகள் சாலை முழுவதும் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

உதகை கமர்சியல் சாலையில் மனிதக் கழிவுகள் சாலை முழுவதும்


உதகை கமர்சியல் சாலையில் மனிதக்  கழிவுகள்  சாலை முழுவதும்

 

பாதசாரிகள் பெரும் அவதி உதகையில் தொடர்ச்சியாக வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகையின் மையப்பகுதியும் மிக முக்கிய சாலையுமான கமர்சியல் சாலையில்  தொடர்ந்து  பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மனித கழிவு நீரானது சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவது மட்டுமல்லாமல் அருகே உள்ள கடைகளின் முகப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் செல்வதால் பெரும் சுகாதார சீர்கேடு தொடர்வதாக வியாபாரிகள் பொதுமக்கள் அதிருப்திதெரிவிக்கின்றனர்.


முறையாக பராமரிப்பற்ற நிலையில், சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு நகரின் சாலைகளில் கழிவுநீர் வழிந் தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது .பாதாள சாக்கடை திட் டத்தை முறையாக செயல்படுத்த வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர். என். வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad