உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே திருச்சி சென்னை ஜிஎஸ்டி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அரியலூரில் இருந்து ஒரு டாரஸ் லாரி சுண்ணாம்புலோடு ஏற்றுக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது லாரியை மேல் மருவத்தூரை சேர்ந்த சண்முகம் என்பவர் ஓட்டி சென்றார் இந்த லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே திருச்சி சென்னை ஜிஎஸ்டி சாலையில் இன்று காலை வந்து கொண்டிருந்த பொழுது திடீரென பழுதாகி சாலையில் நின்றது. அப்போது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது மேலும் காரில் ஏர் பிரேக் பயன்படுத்தியதால் கார் ஓட்டுநர் தென்காசி மாவட்டம் சுரண்டியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் காரில் பயணம் செய்த திருநெல்வேலி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஊழியர் லதா மற்றும் பிரானாவ் 10 வயது மகன் மற்றும் மகள் லக்ஷனா 16 வயது உட்பட 4 பேர் காயமடைந்தனர் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டுனரின் அருகில் அமர்ந்து பயணம் செய்த தென்காசி மாவட்டம் திருமலாபுரம் சேர்ந்த லதாவின் உறவினர் காந்தி என்பவர் விபத்துக்குள்ளான காரின் இடர்பாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏர் பிரேக் பயன்படுத்தப்படும் காந்தி சீட் பெல்ட் அணியாததால் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் இது பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட காரின் இடர்பாடுகளில் சிக்கி இருந்த உயிரிழந்த காந்தியின் உடலை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி சென்னை நான்கு வழி சாலையில் நடைபெற்ற இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக