உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசின் சார்பில் கடந்த இரண்டாம் தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது அதில் விவசாயிகள் மாணவர்கள் இளைஞர்கள் வியாபாரிகள் பெண்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் எதிராகவும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகவும் நெல் கொள்முதலை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த 60 ஆண்டுகளாக அதிக லாபத்துடன் ஏங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை அதானி அம்பானி குழுமத்திற்கு தாரைவாக்கும் மத்திய அரசின் தனியார் மய கொள்கையை கைவிட வேண்டும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்க தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad