சாலையோரம் இருந்த 10அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

சாலையோரம் இருந்த 10அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி சிறப்பு காவல் படை அருகே சாலையோரம் இருந்த 10அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த கணவன், மனைவி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னை பல்லாவரம் பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனிஜெரால்டு தனியா டிராவல்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வரும் இவர் தனது தந்தை மணி, மனைவி சாந்தி ஆகியோருடன் ஒரு காரில் கரூரில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர் இந்த கார் இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி சிறப்பு காவல் படை அருகே வரும் பொழுது தூக்க கலகத்தின் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த 10அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இதில் தலையில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் காரை ஓட்டி வந்த ஆண்டனிஜெரால்டு, இவரது மனைவி சாந்தி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்து விபத்து பற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad