இரணியல் அருகே கணவரை தற்கொலைக்கு தூண்டிய மனைவி கைது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

இரணியல் அருகே கணவரை தற்கொலைக்கு தூண்டிய மனைவி கைது

 


இரணியல் அருகே கணவரை  தற்கொலைக்கு தூண்டிய மனைவி கைது 


இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் (47). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுனிதா (45). இவர்களுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்  நடந்தது. குழந்தைகள் இல்லை.

      


இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சுனிதா திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதை அடுத்து பெஞ்சமின் அவசரமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் சுனிதா மாயமானது குறித்து இரணியல்  போலீசில் புகார் அளித்தார்.

      

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த 28-ம்  தேதி பெஞ்சமன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் உருக்கமான வீடியோவை அவர் வெளியிட்டது தெரிய வந்தது. அந்த வீடியோவில் தனது மனைவி சுனிதா மற்றொரு நபருடன் ஓடி விட்டதாக தெரிவித்திருந்தார். அதன்படி போலீசார் வழக்கு கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக சுனிதாவை போலீசார் கைது செய்தனர். மேலும்  இரண்டு பேரை தேடி வருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad