பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ விமானம் அவசர அவசரமாக மதுரையில் விமான நிலையத்தில் தரையிறங்கியது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ விமானம் அவசர அவசரமாக மதுரையில் விமான நிலையத்தில் தரையிறங்கியது.


பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ விமானம் அவசர அவசரமாக மதுரையில் விமான நிலையத்தில் தரையிறங்கியது.


பெங்களூரு - திருவனந்தபுரம் இன்டிகோ விமானத்தில் மேற்குவங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் பயணம் செய்தார்.

மேற்குவங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த்போஸ் பயணம் செய்த இண்டிகோ விமானம் திருவனந்தபுரத்தில் தரையிரங்காமல் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியதால் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டனர்.


பெங்களுரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ ஏர்பஸ் விமானம் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை மின்விளக்கு எரியாத காரணத்தால் மதுரை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு  புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் 172 பயணிகளுடன் பயணம் செய்தது.

திருவனந்தபுரம்விமான நிலைய ஓடும் அதை மின்விளக்குகள் சரியாக எறியாததால் இண்டிகோ விமானம் மதுரைக்கு அனுப்பப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியதையடுத்து மதுரை விமான நிலைய தீயணைப்புத் துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பு வீரர்கள்  பாதுகாட் ப பணியில் ஈடுபட்டு விமானத்தில் வந்தப் பயணிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவிலிருந்து திருவனந்தபுரம் சென்ற விமானம் திருவனந்தபுரத்தில் ரன்வே ஒரு பாதை மின்விளக்கு கோளறு காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியதயடுத்து மதுரை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பாக காணப்படுகிறது -

தற்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் விமானம் 172 பயணிகளுடன் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது.

மும்பை - திருவனந்தபுரம் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டு புறப்பட தயார் நிலையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad