திருப்பத்தூர், பிப் 14 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்ட அறிவிப்பின்பால் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் வாயிலாக பொது மக்களை நாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் களத்திற்கு நேரடியாக சென்று ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மக்கள் குறைகளை நிறை வேற்றுவது தான் இத்திட்டத்தின் செயல் பாடுகள் ஆகும். இக்களப்பணியினை நிறைவேற்றும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டு தலின்படி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம், துத்திப்பட்டு ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவசௌந்திரவல்லி, இ.ஆ.ப., அவர்கள் 19.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் 20.02.2025 அன்று காலை 09.00 மணி வரை அப்பகுதியில் தங்கி அரசு வழிகாட்டுதலின்படி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே இதேபோன்று அவ்வட்ட பகுதியில் உள்ள ஊராட்சிகளில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அன்றைய நாளில் மாலை 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற கிராமத்தில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து அவரவர் பார்வையிட்ட பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணுவதே இத்திட்டத்தின் முன்னோடி நோக்கமாகும். எனவே, மேற்படி திட்டத்தின் வாயிலாக பயன்பெற ஏதுவாக ஆம்பூர் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் மட்டும் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் 19.02.2025 அன்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து, மேலும் துத்திப்பட்டு ஊராட்சியில் நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக