சிவகங்கை மாவட்ட மாணவர்கள் யோகாசனம் செய்து உலக சாதனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் யோகாசனம் செய்து உலக சாதனை


சிவகங்கை மாவட்ட மாணவர்கள் யோகாசனம் செய்து உலக சாதனை


இந்திய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக சென்னையில் நோபல் பரிசு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.  இவ்வுலக சாதனையில் மொத்தம் 5000 மாணவர்கள் பங்கு பெற்று உலக சாதனை படைத்தனர்.  இதில் சிவகங்கை மாவட்டம் சார்பாக 52 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தனர்.  இச்சாதனையில் சிவகங்கை மாவட்ட செயலாளர் யோகா ஆச்சாரியார் திரு. பூ புவனேஷ் மாணவர்களை வழி நடத்தினார்.  உலக சாதனை நிகழ்ச்சியில் இந்தியன் யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு செயலாளர் டாக்டர். அரவிந்த் லட்சுமி நாராயணன்,  தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு செயலாளர் திரு. பரணிதரன் நோபல் பரிசு உலக சாதனை (COO) திரு. வினோத்குமார், இந்திய யோகாசன  நடுவர் திரு. பரத் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கினர். மேலும் 2025 ஆண்டிற்கான யோகா கலைமாமணி விருது சிவகங்கை மாவட்ட யோகாசன செயலாளர் மற்றும் சாய்மகிழ் யோகா மையத்தின்  நிறுவனர் யோகா ஆச்சாரியார் திரு. புவனேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தண்ணீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புஜங்காசனம் நிலையில் நெற்றியில் டம்ளரில் தண்ணீர் வைத்தபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad