குடியாத்தம் ,பிப் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வார்டு 31 வது வார்டு இரண்டாவது ஆண்டியப்ப முதலிய தெரு காமாட்சி அம்மன் பேட்டை பெரிய கழிவு நீர் கால்வாய் கட்டப் பட்டுள்ளது கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளதால் செடி கொடிகள் வளர்ந்து உள்ளதால் டெங்கு மற்றும் மலேரியா ஏற்பட வாய்ப்புள்ளது புதிய கழிவுநீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் கழிவுநீர் கால்வாய் கட்டப்படவில்லை நகராட்சி நிர்வாகத்திடம் கழிவுநீர் கால்வாய் கட்ட பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆகையால் நகராட்சி நிர்வாகம் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன போஸ் பேட்டை விநாயகர் கோவில் பக்கத்தில் கல்வெட்டு உள்ளது பெரிய கழிவு நீர் கால்வாய் அந்த வழியாக வெளியே செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி உள்ளது கல்வெட்டின் கீழ் மண் சரிந்துள்ளதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் அங்கே நிற்கின்றனர் இதைப் பற்றி பலமுறை நகராட்சியிடம் தகவல்கள் தெரிவித்தோம் அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கப் படவில்லை இனிமேலாவது நகராட்சி நிர்வாகம் கழிநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக