குடியாத்தம்,பிப் 4 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அருகே சட்ட விரோதமாக வெளி மாநில மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 4- நபர்கள் கைது அவர்களிடமிருந்து பழைய மது பாட்டில்கள் லேபிள் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன கே வி குப்பம் பகுதியில் ஒரு கும்பல் சட்ட விரோதமாக வெளி மாநில சரக்குகள் மீது போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்வதாக குடியாத்தம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து வேப்பங்கனேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மேல்மாயில் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரிடம் மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்வது தெரிய வந்தது
இதையடுத்து அவரிடமிருந்து 16 FUll பாட்டில்களை பறிமுதல் செய்து விக்னேஷ் என்பவரை அழைத்துக் கொண்டு ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆலங்கனேரி பகுதியை சேர்ந்த விஜய் பிரகாஷ் (வயது 30) என்பவரை கைது செய்தனர்
வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் சுமார் 200 க்கும் அதிகமான பாட்டில்கள் மற்றும் ராணுவ கேண்டினில் வழங்கும் மது பாட்டிலில் ஒட்டப்பட்டு இருப்பதை போன்ற ஆயிரத்துக்கு அதிகமான போலி ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் டி ராமச்சந்திரன் கலால் ஆய்வாளர் சின்னதுரை ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் அந்த நேரத்தில் வெளியில் சென்று வீட்டுக்கு வந்த ஜெயப்பிரகாஷ் வயது 37 என்பவரை போலீசார் கைது செய்தனர் மேலும் போலி ஸ்டிக்கர் வடிவமைத்து கொடுத்த சைதாப்பேட்டை சேர்ந்த பாலமுருகன் வயது 27 ஆகியோரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர் இது சம்பந்தமாக போலீசாரிடம் கேட்டபோது கர்நாடகாவில் ஒரு லிட்டர் மது ரூ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது இங்கே 750 மில்லி கொண்ட புல் பாட்டில் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது விற்பனை செய்யும் மது பாட்டில்கள் மீது போலி ஸ்டிக்கர்கள் ஒட்டி விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக