பேராவூரணி இளைஞரை கரம் பிடித்த பங்களாதேஷ் பெண் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

பேராவூரணி இளைஞரை கரம் பிடித்த பங்களாதேஷ் பெண்

 


பேராவூரணி இளைஞரை கரம் பிடித்த பங்களாதேஷ் பெண்... 


இந்து முறைப்படி திருமணம் நடந்தது பேராவூரணி பிப்-10 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி-இளமதி தம்பதி, இவரது மகன் குலோத்துங்க சோழன் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பங்களாதேஷ் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவருமான ராதா மதாப் சர்மா - அனிதா சர்மா தம்பதியரின் மகளுமான மலேசியா ஹானர்ஸ் செகி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அனிலா சர்மாவுக்கும் இடையே காதல் அரும்பியது.


குலோத்துங்க சோழன் - அனிலா சர்மா காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து, பேராவூரணி திருமண மண்டபத்தில் இருவருக்கும் இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. மணமகன் - மணமகளுக்கு மாலை மாற்றி, தாலி அணிவித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும் திரளாக கலந்து கொண்டனர். மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர


பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad