கனிம வள வாகனங்களை அரசு எடை மேடையில் மட்டுமே எடை போட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேண்டுகோள்
அரசு எடை மேடையில் மட்டுமே கனிமவள வாகனங்களுக்கு எடை போட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருநெல்வேலி மண்டல தலைவர் தோழர் கண்மணி மாவீரன் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அளவில் கனரக வாகனங்கள் மூலம் அதிக எடையுடன் திருடி செல்வது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு அளித்து அது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் எவ்விதமா நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததால் நான் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து அது நிலுவையில் உள்ளது அந்த ரெட் வந்து தாக்கல் செய்தும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு 24 4 2022-ன் படி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதியில் இடைநிலை அமைக்க உத்தரவு பிறப்பித்தது அந்த உத்தரவின்படி கன்னியாகுமரி மாவட்ட கனிமம் மற்றும் சுங்கத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து எடை நிலையம் அமைத்து அதனை ஆரல்வாய்மொழி பேரூராட்சி வசம் ஒப்படைத்து அதனை செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டது அந்த உத்தரவின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதியில் அரசு எடமேடை செயல்பட்டு வருகிறது அதில் கனிம வளத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கண்காணித்து கனிம வளம் ஏற்றி வரும் கர்நாடக வாகனங்களை எடைபோட்டு வந்தனர் தற்போது அரசின் எந்த விதமான அனுமதியும் இன்றி திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் எடை மேடையில் வாகனங்கள் எடை போடப்பட்டு செல்கிறது இதன் மூலமாக வாகனங்களை முறையான எடை போடாமல் அனுப்பவும் வாய்ப்பு உள்ளது அரசுக்கும் பெறுவாரியான வருவாய் இழப்பும் ஏற்படுகிறது அதிக எடையுடன் வாகனங்கள் கேரளாவிற்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது இது சம்பந்தமாக பல்வேறு நபர்கள் புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது மேலும் நான்கு வழி சாலை வழியாக கனரக கனிம வளம் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்வதால் ஆரல்வாய்மொழி நான்கு வழி சாலையில் இடத்தினை தேர்வு செய்து அரசு எடை மேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக குமரி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வர பாண்டியன் நிர்வாகிகள் சின்னத்துரை, எட்வின், நெல்சன் ஆகியோர் உடன் இருந்தனர்
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர் T.தமிழன் ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக