இது நாள் வரை திறக்கப்படாமல் இருந்த காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவல கம் திறப்பு விழா! அமைச்சர் பங்கேற்பு !
காட்பாடி , மே 30 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர் கிழக்கு, விருதம்பட்டு காவல் நிலையம் பின்புறம், காட்பாடி சட்டமன்ற அலுவலகம், கடந்த சட்டமன்றத் தேர்த லில் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பி னராக தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் டாக்டர் எம் .சுதாகர் வெற்றி பெற்ற தைத் தொடர்ந்து, இந்த அலுவல கத்தை சுமார் 10, 15 ஆண்டுகளுக்கும் மேல் கட்டி பூட்டியதுடன் இது நாள் வரை திறக்கப் படாமல் இருந்த காட்பாடி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம், காட்பாடி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நேரில் வந்து சந்தித்து மனுவாகவோ அல்லது நேரில் சந்தித்து குறைகளை கூற, புனரமைக்கப்பட்ட காட்பாடி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி இனிப்பு களை வழங்கினர். இதில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம் சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் கண்ணா, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பி னர் சிந்து, கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப் பினர் தென்றல் குமார் மாவட்ட செயலாளர் நவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் த.வெ.க நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கற்று திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக