ரயில் தண்டவாளம் அருகே உள்ள கால் வாயில் விழுந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் காட்பாடி ரயில்வே போலீ சார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 மே, 2026

ரயில் தண்டவாளம் அருகே உள்ள கால் வாயில் விழுந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் காட்பாடி ரயில்வே போலீ சார் விசாரணை !

ரயில் தண்டவாளம் அருகே உள்ள கால் வாயில் விழுந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை !
காட்பாடி , மே 30 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் ரயில் நிலையத்திற்கும் திருவலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள  Upline பகுதியில் நேற்று  சுமார் (35 வயது) மதிக் கத்தக்க ஆண் நபர்  ஒருவர் அங்குள்ள கால் வாயில் பலத்த காயங் களுடன் மயக்க நிலையில் விழுந்து கிடந்துள்ளார்
இதனைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், உடனடி யாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்க்காடு அரசு பொது மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச் சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதும் அவர் மயங்கிய நிலையிலேயே இருப்ப தால் அவருடைய பெயர் மற்றும் விலாசம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரிய வில்லை.இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விபத்து வழக்கு  பதிவு செய்து காயமடைந்த நபர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? மற்றும் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்பொழுது சேர்க்காடு அரசு மருத்துவ மனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அந்த நபர் அடுக்கம்பாறை அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டது என தெரிவித்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad