வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 மே, 2026

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

வைகாசி விசாகத்தையொட்டி 
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
கடலில் நீராடி, 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாகம் ஒன்று. வைகாசி மாத விசாக நட்சத்திரம் முருகன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. 

அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாகம் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். 

கோவில் கடல், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விசாகத்தையொட்டி நாளை வரை 4 நாட்களுக்கு ரூபாய் 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad