காங்கயத்தில் வெறி நாய் கடித்ததால் ஆடுகள் கோழிகள் உயிரிழப்பு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

காங்கயத்தில் வெறி நாய் கடித்ததால் ஆடுகள் கோழிகள் உயிரிழப்பு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.


திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், தாராபுரம், வெள்ளகோவில், குண்டடம், மூலனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தெரு நாய்கள் கடித்ததால் 500 க்கும் மேற்பட்ட ஆடுகள், 200க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்ததாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் தெரு நாய்கள் கடிப்பதால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு ஏற்றவாறு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக 48 நாளில் உயிரிழக்கும்  கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் கால்நடைகள் உயிரிழப்பு தொடர்ந்து வரக்கூடிய நிலையிலும் இழப்பீடு தருவதற்கான எந்தவித உத்திரவாதமும் இதுவரை இல்லை என குற்றம் சாட்டி நேற்று முன்தினம் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உயிரிழந்த 23 ஆட்டுக்குட்டிகளுடன் விவசாயிகள் திட்டுப்பாறை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் அதே பகுதியில் மறியல் போராட்டம் நடத்தி இன்றும் இரண்டாவது நாளாக உயிரிழந்த கால்நடைகள் மட்டுமல்லாது தங்களது வளர்த்து வரும் கால்நடைகளையும் மறியல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இவர்களுடன் காவல் துறையினர் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு ஏற்படாததால் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர் இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக பெண்கள் உள்பட விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர் இதில் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காயம் அடைந்தனர் போராட்டத்திற்கு கொண்டு வந்திருந்த கால்நடைகளையும் இந்த கைது நடவடிக்கையின்போது போது இழுத்து சென்றனர் தற்போது விடுதலை செய்யும் பட்சத்தில் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடர இருப்பதாக இந்த விவசாயிகள் தெரிவித்தனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad