உளுந்தூர்பேட்டை அடுத்து பருகம்பட்டு தனியார் மண்டபத்தில் மக்கள் மேம்பாட்டு கழக கூடுகை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பருகம்பட்டு ஜே ஜே மஹாலில் இன்று மக்கள் மேம்பாட்டு கழக கூடுகை ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் மக்கள் மேம்பாட்டு கழக தென்னிந்திய துணைத் தலைவர் இருதயம் வல்லரசு தலைமை வகித்தார் மக்கள் மேம்பாட்டு கழக மாநில இணை தலைவர் ஆரோக்கியதாஸ், மாநில பொதுச் செயலாளர் டேனியல் தர்மராஜ், பாக்கியநாதன், சவரிமுத்து ஜான் கிளியோ போஸ்கோ ஆரோக்கியசாமி,டாக்டர் லூர்து மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் அப்பொழுது கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர் 1.கிறித்தவர்களுக்கு வழங்கிய 3.5% இட ஒதுக்கீட்டை 5 % மாக உயர்த்தி வழங்க வேண்டும் 2.தலித் கிறித்தவர்களுக்கு SC - இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் 3.வன்னிய கிறித்தவர்களுக்கு MBC பட்டியலில் சேர்க்க வேண்டும் 4.மத்திய மாநில அரசுகளே சிறுபான்மை வழிபாட்டு தலங்கள் கல்வி நிறுவனங்கள் மருத்துவ மனைக்கள் போன்ற இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக