ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ-ஜியோ) பேரமைப்பின் சார்பில் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ-ஜியோ) பேரமைப்பின் சார்பில் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்!




காட்பாடி , பிப் 12 -

வேலூர் மாவட்டம் காட்பாடி
ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ-ஜியோ) பேரமைப்பின் சார்பில் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பழைய ஓய்வூதிய திட்டம், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 14.02.2025 மாலை 5 மணியளவில் ஆர்ப் பாட்டம் நடத்திட தீர்மானித் துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் காட்பாடி வட்ட கூட்டம் இன்று மாலை காட்பாடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் கே.தனசேகர் வரவேற்று பேசினார்.அரசு ஊழியர் சங்க காட்பாடி வட்டகிளைத்தலைவர் ஆர்.சுகுமாரன் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் எ.டி.அல்போன்ஸ்கிரி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கே.மஞ்சுளா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஆர்.புவனேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் ஆர்.கற்பகமணி, செயலாளர் ஜி.தெய்வசிகாமணி, ஜி.ருத்ரமூர்த்தி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் கே.தனசேகர், ஜி.பாலா, ஜி.பழனி, தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்க கல்வி மாவட்ட தலைவர் வி.திருக்குமரன், மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ்.ஈஸ்வர ஆனந்த் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வட்டார  செயலாளர் ஆர்.இராஜன், கல்வித்துறை நிர்வாக அலுவலகர் சங்க ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கையினை தொழிற்கல்வி ஆசிரியர் கழக தலைவர் செ.நா. ஜனார்த்தனன் வெளியிட அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுகுமாரன் பெற்றுக்கொண்டார் ஆசிரியர் மன்றத்தின் வட்டார தலைவர் கே.சோக்காராமன், நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad