உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ.குமாரமங்கலம் ஜிஎஸ்டி சாலையில் வயலுக்குச் செல்ல சாலையை கடக்கும் முயன்ற மூதாட்டி இருசக்கர வாகன மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பு 80 வயதான இவர் இன்று சனிக்கிழமை காலை அதே கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு செல்ல உளுந்தூர்பேட்டை சேலம் ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற இருசக்கர வாகனம் உப்பு மீது மோதியது இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சென்னை குமாரபுரம் டெலிபோன் காலனியில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக அவர் மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல்D.செல்வம் உளுந்தூர்பேட்டை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக