திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் துறையேறி பகுதியை சேர்ந்த மாற்று சமூக பெண்ணான சந்தியா என்பவரை சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில், சசிகுமாரை கணவாய்புதூர் பஞ்சாயத்து நிர்வாகிகள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், மேலும் கடந்த 5 ஆம் தேதி சசிகுமாரின் பாட்டி கனகா என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் தடுத்தாகவும், இதனால் மூதாட்டி, கனகாவின் உடலை, மின்னூர் பகுதியில், அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சசிகுமார் மற்றும் சந்தியாவை, தங்களது பாட்டியின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்யவிடாமல், சாதிய ரீதியாக பேசியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 8 ஆம் தேதி சந்தியா வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணவாய்புதூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும், கோவிந்தாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பழனி மீது புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில், கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த கோவிந்தாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பழனி உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, கோவிந்தாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பழனியை காவல்துறையினர் கைது செய்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவரை விடுவிக்க கோரி கணவாய்புதூரை சேர்ந்த ஆண்கள், பெண்கள், என 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில், ஈடுப்பட்டு காவல்துறையினருடன் வாக்குவாத்ததில் ஈடுப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து வாணியம்பாடியில் மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது,
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, போராட்டத்தை கைவிடுமாறு கூறியாதல், கணவாய்புதூர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்சென்றனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக