மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை,மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆகியன சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி . ஸ்டாலின், தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.கல்லூரி செயலர் கே.வி.ராதாகிருஷ்ணன், இயக்குனர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. மனோகர், காவல் உதவி ஆய்வாளர்கள் காயத்ரி , சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி வரவேற்றார். இதில் சமூக நீதியை நிலைநாட்டியது அன்றா ? இன்றா ? என்ற தலைப்பில் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இரு அணிகளாக பிரிந்து நடந்தபட்டி மன்றத்திற்கு, கல்லூரி துணை முதல்வர், தமிழ் துறை தலைவர்
ஜெயந்திகிருஷ்ணா, நடுவராக இருந்தார். இதில் சமூக நீதியை நிலைநாட்டியது இன்றைய காலகட்டமே என தீர்ப்பு வழங்கப்பட்டது.
பட்டிமன்றத்தில் பங்கேற்று பேசிய மாணவிகளை பாராட்டி,சான்றிதழ்களை வழங்கி எஸ்.பி. கோ.ஸ்டாலின் பேசுகையில், அன்றைய காலத்தில் சொத்தில் சம உரிமை , வாக்குரிமை போன்ற உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில் சமூக நீதிக்கான வித்து 1920 ஆம் ஆண்டில் தான் ஏற்பட்டது. இன்றைய காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து திறமைகளை நிலைநாட்டி வருகின்றனர். ஏற்றத்தாழ்வு இல்லாமல் சம உரிமை வழங்கப்பட்டு சமூக நீதி இன்று நிலை நாட்டப்படுகிறது. தமிழகம் சமூக நீதியில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது என்றார்.
பின்னர் கல்லூரியில் நடந்த சமபந்தி விருந்தில் மாவட்ட எஸ் .பி ஸ்டாலின்,
கல்லூரி செயலர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் அனிதா, முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், காவல்துறையினர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். நிறைவில் எஸ் .ஐ,சந்திரசேகர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக