மானாமதுரை ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் பொது கிடாவெட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - மதுரை தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் குரோதி வருடம் மாசி மாதம் 3-ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை பொது கிடா வெட்டை முன்னிட்டு மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊர் கிராம பொதுமக்கள் சார்பாக ஸ்ரீ தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார, அபிஷேகங்கள் மற்றும் பிராத்தனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பொங்கல் வைத்து, கிடா மற்றும் சேவல் ஆகியவற்றை பலியிட்டு தங்களது வழிபாட்டை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சுமார் 800 நபர்களுக்கான சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலய நிர்வாகிகள், மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்த கோடி பெருமக்கள், உள்ளூர் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் குடும்பம் குடும்பமாக பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக